மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் பயிர் சேத இழப்பீடு
19-Sep-2025
மேலுார், : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. விவசாயிகள் கிருஷ்ணன், மணி, கதிரேசன், பாண்டி, அருண், சிதம்பரம் உள்ளிட்டோர் பேசியதாவது: இக்கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாதவூர் பகுதியில் இலுப்பகுடி கால்வாய் சிலாப்புகள் பதிக்கப்பட்ட சில நாட்களிலேயே சிதலமடைந்து விட்டன. நீர்வளத்துறை ஏ.இ., மட்டுமே வருவதால் விவசாயிகள் குறைகளுக்கு அவர்களுக்கு பதில் தெரியவில்லை. தும்பைபட்டி பகுதிகளுக்கு பாசன தண்ணீர் இதுவரை வரவில்லை. நுாறுநாள் பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது விவசாய பணி முடியும் வரை தற்காலிகமாக நுாறு நாள் வேலையை நிறுத்தி வைக்க வேண்டும். கொட்டாம்பட்டி பகுதியில் இருந்து வேளாண் அதிகாரிகள் வருவதில்லை. பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேளாண் அதிகாரிகள் பரிந்துரைத்தால் மட்டுமே உரக்கடைகளில் உரம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
19-Sep-2025