ஒரு போன் போதுமே...
பள்ளத்தை மூடுங்க காமராஜர் ரோடு கான்வென்ட் சந்தையில், கூட்டுக் குடிநீர் குழாய் பாதிக்க தோண்டிய குழிகளை, பணி முடிந்து பல நாட்களாகியும் சிலாப் கொண்டு மறைத்துள்ளனர். அதிகாரிகள் குழிகளை முறையாக மூடி, ரோடு அமைக்க வேண்டும். - உஷா, காமராஜர் ரோடு. நடைபாதை ஆக்கிரமிப்பு தெற்கு வாசல் சின்னக்கடை வீதி, தெற்கு மாரட் வீதி முழுவதும் கடைகள் முன்பு கனரக வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். டூவீலர்களால் நடைபாதையையும் விட்டு வைக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற போலீசாரின் நடவடிக்கை தேவை. - செல்வம், தெற்கு வாசல். கழிவுநீர் வெளியேற்றம் செல்லுார் - குலமங்கலம் இணைப்பு ரோட்டில் உருவாகியுள்ள பள்ளத்தில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. அவ்வழியாக செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளத்தை மூட வேண்டும். - அபுபக்கர், செல்லுார். டிரான்ஸ்பார்மரை அகற்றுங்க தாசில்தார் நகர், முல்லை தெரு, செந்தில்நாதன் குறுக்குத் தெருவில் பழைய டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் அடிக்கடி தீப்பொறி விழுவதால் வீட்டில் வசிப்போருக்கு காயம் ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் நிறுவ வேண்டும். - வெங்கடேச பாண்டியன், தாசில்தார் நகர். தெருவிளக்கு எரியல பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில், தெரு விளக்குகள் பல நாட்களாக எரிவதில்லை. திருட்டு அச்சத்தால் பெண்கள், குழந்தைகள் இரவில் அவ்வழியாக செல்ல அஞ்சுகின்றனர். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். - சங்கரன், பழங்காநத்தம். குழாய் உடைத்த மாநகராட்சி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் பாதாள சாக்கடை பணியின் போது, 6 வீடுகளுக்கான குடிநீர் குழாய், மண் அள்ளும் இயந்திரத்தால் சேதப்படுத்தப்பட்டது. அந்த வீட்டு உரிமையாளர்களிடமே பணம் பெற்று சரி செய்த நிலையில் தண்ணீர் குறைவாக வருகிறது. மாநகராட்சி தவறுக்கு மக்களிடம் வசூலிக்கலாமா. - சண்முகசுந்தரம், வடக்கு ஆவணி மூல வீதி. மருத்துவமனையில் விரிசல் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு கட்டட கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், பணியாளர்கள் பெயர்ந்து விழுவதால் அச்சத்துடன் சிகிச்சை பெறுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். - விஸ்வரூபம், தென்கரை.