உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாக்கடை பணியை முடிங்க

சாக்கடை பணியை முடிங்க

மாநகராட்சி 92வது வார்டு அவனியாபுரம் எம்.எம்.சி., காலனி தங்கம் நகரில், பாதாள சாக்டைக்காக 10 ஆண்டுகளுக்கு முன் தோண்டிய ரோடு பணி இதுவரை முடியவில்லை. ரோடும் அமைக்கவில்லை. வெளியில் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. பணியை விரைந்து முடிக்க வேண்டும். - பாலாஜி, அவனியாபுரம். ஆபத்தான பாலம் ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே போக்குவரத்து மிகுந்து காணப்படும் பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்துள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இரும்புக் கம்பிகள் நீட்டிக்கொண்டுள்ளன. விபரீதம் விளையும் முன் அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க வேண்டும். - விஜய், ஆரப்பாளையம். தெருநாய்கள் தொல்லை திருநகர் 8வது ஸ்டாப் காந்திஜி வீதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இரவில் பெண்கள், குழந்தைகள், டூவீலரில் செல்வோரை துரத்துவதால் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - லட்சுமி, திருநகர். குண்டுகுழி ரோடு மதுரை அச்சம்பத்து ஏற்குடி ஊராட்சி அலுவலகம் முன்புள்ள ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டை சீரமைக்க வேண்டும். - குமார், அச்சம்பத்து. பொங்கும் சாக்கடை மதுரை பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு பணியால் பாதாள சாக்கடை வெளியேறும் வழிகள் அடைபட்டுள்ளது. கான்சாபுரம் மெயின் ரோட்டில் கழிவுநீர் பொங்குவதால், துர்நாற்றம் ஏற்படுகிறது. விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். - சந்தோஷ், செல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி