உண்டியல் திறப்பு
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில், அதன் 10 உபகோயில்களில் உள்ள நிரந்தர உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. கோயில் இணை கமிஷனர் சுரேஷ் தலைமையில், கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் நயக்குநாராயணன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. ரூ.90 லட்சத்து 20ஆயிரத்து 285, தங்கம் 195 கிராம், வெள்ளி 792 கிராம், 202 வெளி நாட்டு பணம் இருந்தது.