உண்டியல் திறப்பு ரூ.1.42 கோடி காணிக்கை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் முன்னிலையில் இக்கோயில், 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல் திறக்கப்பட்டது. கோயில் அறங்காவலர்கள், ஹிந்து அறநிலையத்ததுறை, கோயில், வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியல்களில் ரொக்கம் ரூ.1 கோடியே 42 லட்சத்து 32 ஆயிரத்து 322, பலமாற்று பொன் இனங்கள் 541 கிராம், வெள்ளி 1672 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 301 இருந்தன என கோயில் இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.