மேலும் செய்திகள்
பா.ஜ., ஊர்வலம்
24-May-2025
சோழவந்தான்: சோழவந்தானில் பா.ஜ., சார்பில் ஆபரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணமான பிரதமர் மோடி, முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊர்வலம் நடந்தது.மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல் தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார்.மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வி, மண்டல் பொதுச் செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் முருகேஸ்வரி, வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, பொதுச் செயலாளர் நாட்டரசன் மற்றும் நிர்வாகிகள் தேசியக்கொடி ஏந்தி பங்கேற்றனர்.காமராஜர் சிலை முன்பு துவங்கி முக்கிய தெருக்கள் வழியாக ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு நிறைவு பெற்றது.
24-May-2025