உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஐ.என்.டி.யூ.சி.,  தேர்தலுக்கு எதிர்ப்பு

 ஐ.என்.டி.யூ.சி.,  தேர்தலுக்கு எதிர்ப்பு

மதுரை: 'மதுரையில் இந்திய தேசிய தொழிற்சங்கம் (ஐ.என்.டி.யூ.சி.,) மாநில நிர்வாகிகள் தேர்தலை விதிமீறி நடத்தக் கூடாது' என போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மாநில நிர்வாகிகள் தேர்தலை சங்க விதிப்படி நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று (நவ.15) மதுரையில் மாநில நிர்வாகிகள் தேர்வு நடப்பதாக ஒரு தரப்பு அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்தலை தடை செய்யக் கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நவ.12ல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் நடக்கும் தேர்தலை நிறுத்தக் கோரி ஐ.என்.டி.யூ.சி., தேர்தல் அதிகாரிகள் கல்யாண ராமன், லிங்க மூர்த்தி, ஆறுமுகம், நந்தகுமார் ஆகியோர் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ