மேலும் செய்திகள்
மழை பொழிவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிவு
11-Jul-2025
தி.மு.க., எதிர்க்கட்சியாவதே நல்லது
03-Jul-2025
மதுரை: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு வீணாக திருப்பி விடப்படும் தண்ணீரை வைகை அணையில் தேக்குவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என ஒருபோக விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். நிர்வாகி குறிஞ்சிகுமரன் கூறியதாவது: மே மாதத்தில் அணையில் 134 அடி வரை தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் 132 அடி தண்ணீர் இருக்கும் போதே திறந்து விட்டதால் 2 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்காமல் வீணாகி விட்டது. ஆக.10 வரை 'ரூல்கர்வ்' முறைப்படி 137.50 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க அனுமதி உண்டு. ஜூலை 26 ல் அணை நீர்மட்டம் 133 அடியாக உயர்ந்து விட்டது. தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4000 கனஅடி வரை வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2100 கனஅடி வரையே தண்ணீரை வெளியே எடுக்க முடியும். எனவே கூடுதலாக உள்ள அந்த தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு வந்தால் பாசனத்திற்கோ குடிநீர் தேவைக்கோ பயன்படுத்தலாம். மேலுார், திருமங்கலம் பிரதான வாய்க்கால் மூலம் ஒருபோக சாகுபடிக்கு செப்.15ல் தான் தண்ணீர் திறக்கமுடியும். பெரியாறு அணையில் தண்ணீர் கூடுதலாக வந்து கொண்டிருப்பதால் 'ஓவர் ப்ளோ' ஆவதற்கு முன், கூடுதல் தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு வர வேண்டும். அடுத்தடுத்து நீர்வரத்து அதிகரிக்கும் போது அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும். கேரளாவிற்கு தண்ணீரை அனுப்பி வீணாக்குவதை விட இதுவே நல்ல முறை. நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வினிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
11-Jul-2025
03-Jul-2025