உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் புதிய அரசியல் கட்சி தொடக்கம்

மதுரையில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் புதிய அரசியல் கட்சி தொடக்கம்

மதுரை; நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் மதுரையில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.இதற்கான பெயர் அறிவிப்பு நிகழ்ச்சி கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் மதுரையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பார்மா கணேசன், துணை ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.கட்சியை அறிமுகம் செய்து ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது; கடந்த16 ஆண்டுகள், தேசிய செட்டியார்கள் பேரவையாக தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கி நடத்திவந்தோம். தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் புதிய கட்சி தொடங்கலாமா? வேண்டாமா? என கருத்து வாக்கெடுப்பு நடத்தினோம். 20க்கும் மேற்பட்ட வாகனங்களில், ஓட்டு பெட்டிகள் வைத்து, 5 லட்சம் மக்களிடையே கருத்து கேட்கப்பட்டது. இதில் 90 சதவீதம் மக்கள் புதிதாக அரசியல் கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.அதன்படி எனது தலைமையில் 'நமது மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளோம். குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் இந்த கட்சியை தொடங்கியுள்ளோம். எங்கள் கொள்கைகளில் ஈர்ப்பு கொண்ட யாரும் உறுப்பினராகலாம்.உள்ளாட்சி அமைப்பு முதல் சட்டமன்றம் வரை பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பது எங்களின் நோக்கம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், எங்களின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைப்பது குறித்து பொதுக்குழு, செயற்குழு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுவோம்.234 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயம் செய்கின்ற வாக்கு சதவீதங்களை நாங்கள் பெற்றுள்ளோம்' என்றார். நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.தமிழன் , சாஸ்தா பாண்டியன், தேனி பன்னீர்செல்வம்,மாநில இளைஞரணி தலைவர் மணி, செயலாளர் சுறா, தலைமை நிலைய செயலாளர்கள் கோவிந்த மணி, ரகுபதி,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை