உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ‛ஏர் கன் புல்லட் தாக்கி இறகு முறிந்த ஆந்தை வேட்டை கும்பலின் கை வரிசையா

‛ஏர் கன் புல்லட் தாக்கி இறகு முறிந்த ஆந்தை வேட்டை கும்பலின் கை வரிசையா

மதுரை; மதுரை விஸ்வநாதபுரம் திருவள்ளுவர் நகரில் 'ஏர் கன்' புல்லட் தாக்கியதில் காயமடைந்து விழுந்த ஆந்தையை ஊர்வனம் அமைப்பினர் மீட்டு தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் சேர்த்தனர்.அமைப்பின் நிர்வாகிகள் விஸ்வநாத், சிவஹர்ஷன், விதோஷ்குமார் கூறியதாவது: பத்தாண்டுகளாக காயமடைந்த, நோயால் பாதித்த மயில், புறா, காகம், மைனா, பருந்து, ஆந்தைகளை மீட்டு கால்நடை துறை மூலம் சிகிச்சை அளித்துள்ளோம். இந்த ஆந்தை தரையில் இறகொடிந்த நிலையில் கிடந்தது. மரத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என நினைத்து மருத்துவமனையில் சேர்த்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்து இறகில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவத்தை முதன்முறையாக பார்க்கிறோம் என்றனர்.முதன்மை டாக்டர் சரவணன், எலும்பு முறிவு நிபுணர் மெரில்ராஜ், டாக்டர் முத்துராம் கூறியதாவது: எக்ஸ்ரே எடுத்ததில் ஒரு பக்க இறகின் மீது 'ஏர் கன்' புல்லட் தாக்கிய அடையாளமும் காரீயகுண்டும் உள்ளே இருந்தது. இதனால் தோள்பட்டை இணைப்பில் உள்ள ஹியூமரஸ் எலும்பு உடைந்துள்ளது. இறகின் எலும்பு முறிந்ததால் வேட்டையாடுவதற்காக யாரோ சுட்டிருக்கலாம் என உறுதியாகிறது.பறவைகளின் எலும்பு மெல்லியதாக இருப்பதால் அவை பறக்கின்றன. எலும்புகள் பாதித்தால் மீள்வது கடினம். ஆந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து உடைந்த கூர்மையான 2 எலும்பு துண்டுகளை 'கே வயர்' மூலம் 'எல்' வடிவத்தில் இணைத்துள்ளோம். அறுவை சிகிச்சைக்கு பின் எக்ஸ் ரே பார்த்தில் எலும்பு பொருந்தியுள்ளது தெரிந்தது. காயம் ஆறுவதற்கு 6 வாரங்களாகும். சிகிச்சை முடிந்ததால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். வனத்துறை கட்டுப்பாட்டில் ஆந்தை ஒப்படைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

PRS
நவ 23, 2024 04:48

மனிதர்கள் எல்லோரும் விலங்குகளை மதிக்கவேண்டும். இல்லையெனில் மற்றோரு கொரோனா வரும்.


Perumal Pillai
நவ 22, 2024 15:19

இந்த நடிப்பு தேவையா ?


JeevaKiran
நவ 22, 2024 10:35

இது போல் நீலகிரியில் தினமும் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன. அதிகாரிகள் சொல்வதென்னவென்றால் , மருத்துவ ரிப்போர்ட் வந்த பிறகுதான் காரணம் தெரியும் என்பார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாகிறது என்று ஒருபோதும் தெரிவதில்லை. இதுவரை எவனும் தண்டித்ததாகவும் செய்தி வரவில்லை?


v narayanan
நவ 22, 2024 09:00

மிருகங்கள் இதை சுட்டவர்கள் .காப்பற்றி மருத்துவம் செய்த அணைத்து நாள் உள்ளங்களுக்கும் நன்றி .விரைவில் ஆந்தை பறக்கட்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை