ஓசோன் தின நிகழ்ச்சி
நாகமலை : எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக ஓசோன் தின நிகழ்ச்சி நடந்தது. ஓசோன் படலத்தின் தேவை, அதன் பயன்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு இவ்விழா நடந்தது. சுற்றுச் சூழலியல் வல்லுநர் துரை விஜய பாண்டியன், ஓசோன் படலம் புற ஊதாக் கதிர்களில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாக்கிறது, இளம் தலைமுறையினர் எவ்வாறு அதை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். முதல்வர் லதா திரவியம் ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளியின் சுற்றுச்சூழல் அமைப்பினர் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.