உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காகிதமில்லா ஆவணப்பதிவு விழிப்புணர்வு முகாம்

 காகிதமில்லா ஆவணப்பதிவு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பதிவுத்துறை சார்பில் அதன் சேவைகளை எளிதாக, வெளிப்படையாக பொதுமக்கள் பெறும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மதுரை மண்டல டி.ஐ.ஜி., ஆனந்த் உத்தரவில் ஏ.ஐ.ஜி., செந்தில்குமார், மாவட்ட பதிவாளர்கள் விஜயசாந்தி, கவிநிலவு, மணிமுருகன், அமீர்ராஜா தலைமையில் இம்முகாம் நடந்தது. பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம், காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை குறித்து விளக்கினர். பதிவுத்துறையின் tnreginet.gov.inதளம், அலைபேசி செயலி மூலம் குடியிருப்பு, மனை, வில்லங்கச் சான்று, திருமணப் பதிவு உள்ளிட்ட 10 சேவைகளை வீட்டில் இருந்தே பெறுவது குறித்தும் விளக்கினர்.பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிவுத்துறை அலுவலர்கள் தீர்வு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி