உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்சி தலைவரிடம் ரூ.5 லட்சம் மோசடி

கட்சி தலைவரிடம் ரூ.5 லட்சம் மோசடி

மதுரை : மதுரையில் நெல் வியாபாரம் தொடர்பாக தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேல்முருகனிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் 56. த.உ.உ.க., தலைவராக உள்ளார். நெல் தேவைக்காக மதுரை சம்பக்குளம் முருகேசன் 31, என்பவரை அணுகினார். இவர் மாட்டுத்தாவணி நெல் மண்டியில் வியாபாரம் செய்கிறார். எவ்வளவு நெல் மூடைகள் கேட்டாலும் ஏற்பாடு செய்து தருவதாக முருகேசன் கூறினார். இதை நம்பி ரூ.5 லட்சத்தை வேல்முருகன் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட முருகேசன், '2 லோடு நெல் மூடைகள் நாளை காலை இறக்கிவிடுகிறேன்' என்றுக்கூறிவிட்டு 'எஸ்கேப்' ஆனார். மூடைகள் வராததாலும், அலைபேசி அழைப்பை எடுக்காததாலும் மாட்டுத்தாவணி நெல்மண்டிக்கு தேடிச் சென்றார். வேல்முருகனை பார்த்ததும் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ