உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயணிகள் காத்திருப்பு அறை திறப்பு விழா

பயணிகள் காத்திருப்பு அறை திறப்பு விழா

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். இந்த அறைகள் முறையே ரூ.9.90 லட்சம்,ரூ.17.68 லட்சத்தில் அமைக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் உள்ளன. நிகழ்ச்சியில் துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் இந்திரா, உதவி கமிஷனர் கோபு, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை