ஓய்வூதியர் சங்க மாநாடு
மதுரை; மதுரையில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை மாநாடு கிளைத் தலைவர் சண்முகவேலு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். உறுப்பினர் அடைக்கண் துவக்க உரையாற்றினார். செயலாளர் தங்கவேலு வேலை அறிக்கை, பொருளாளர் சதாசிவம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயலாளர் பால்முருகன், பொருளாளர் ஜெயராமன், தலைமை ஆசிரியர் ஷேக்நபி உட்பட பலர் பேசினர்.ஓய்வூதியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்தவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புதிய தலைவராக சண்முகவேலு, செயலாளராக அரசகுமார், பொருளாளராக வெற்றிவேல்முருகன், துணைத் தலைவர்களாக சதாசிவம், கோவிந்தராஜன், மீனாட்சிசுந்தரம், இணைச் செயலாளர்களாக தங்கவேல், பிரான்சிஸ், அகஸ்டின் தேர்வு செய்யப்பட்டனர்.