உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பன்றிகள் தொந்தரவால் பரிதவிக்கும் மக்கள்: கண்டு கொள்ளுமா நகராட்சி

பன்றிகள் தொந்தரவால் பரிதவிக்கும் மக்கள்: கண்டு கொள்ளுமா நகராட்சி

மேலுார்; மேலுார் காந்தி நகரில் சுற்றித் திரியும் பன்றிகளால் மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலுார் நகராட்சி 16வது வார்டு காந்தி நகரில் மெயின் வீதி மற்றும் மூன்று தெருக்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பகல், இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக கழிவு நீர் கால்வாய், குப்பை மேடுகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு, தொற்றுநோய் பரவும் அபாயத்துடன் உள்ளது. பன்றிக் குட்டிகள் ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் தினமும் விபத்துக்குள்ளாகின்றனர். சமூக ஆர்வலர் சேவுகமூர்த்தி கூறியதாவது: வைரஸ் கிருமிகளால் மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் அச்சத்துடனே வாழ்கிறோம். வீடுகளை சுற்றித் திரிவதால் கதவுகளை பூட்டிக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறோம். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. திறந்திருக்கும் வீடுகளுக்குள் நுழைந்து உணவு பொருட்களை வீணடிக்கிறது. பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பிடிக்கவில்லை. இதன் பிறகாவது மக்களின் நலன் கருதி அதிகாரிகள் பன்றிகளை அப்புறப்படுத்தி சுகாதாரம் காக்க வேண்டும் என்றார்.நகராட்சி அதிகாரி தினேஷ் குமார் கூறுகையில், ''இவ்வாரத்திற்குள் பன்றிகளை பிடிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ