உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அனுமதியின்றி உடைகல் ஏற்றிய லாரிகளை சிறை பிடித்த மக்கள்

 அனுமதியின்றி உடைகல் ஏற்றிய லாரிகளை சிறை பிடித்த மக்கள்

கள்ளிக்குடி: கள்ளிக்குடி தாலுகா கல்லணையில் பத்துக்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. புதிதாக 3 குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து 2 நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். நேற்று குவாரிகளில் அனுமதிச் சீட்டு இன்றி லாரிகளில் உடைகல் ஏற்றிச் செல்வதாக கூறி, அந்த வழியாக வந்த லாரிகளை கிராமத்தினர் முற்றுகையிட்டனர். பா.ஜ., மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் பங்கேற்றனர். லாரிகளை கூடக்கோவில் போலீசார் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். ஸ்டேஷன் முன்பு மக்கள் கோஷமிட்டனர். 'விதிமீறிய வாகனங்களுக்கு வருவாய்த் துறை அபராதம் விதிக்கும்' என போலீசார் தெரிவித்தனர். கள்ளிக்குடி தாசில்தார் சிவக்குமாரின் கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.வருவாய், கனிமவளத்துறை ஒத்துழைப்போடு நடக்கும் விதி மீறல்களுக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ