மதுரை மக்களே உஷார்
மதுரை: மதுரையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து நகருக்கு நீர் வழங்குவதற்கான பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. பண்ணைப்பட்டி முதல் மதுரை வரை குழாய் பதித்தல், மேல்நிலைத் தொட்டி கட்டுதல், விநியோக குழாய் பதித்தல் பணிகளும் நடக்கின்றன. வீடுகளுக்கு குழாய் வழியே இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கு வைப்புத் தொகை தவிர எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனவே மாநகராட்சி பகுதியில் வசிப்போரிடம் யாரேனும் முல்லை பெரியாறு திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறினால் மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை 78716 61787 என்ற எண்ணில் அலைபேசி, வாட்ஸ் ஆப் மூலமாக புகார் அளிக்கலாம். என மாநகராட்சி அறிவித்துள்ளது.