மக்கள் குறைதீர் கூட்டம்
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. பின்னர் டி.ஆர்.ஓ., அன்பழகன் மனுக்களை பெற்றார். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். சீர்மரபினர் நலச் சங்கத்தினர் மாநில துணைத் தலைவர் ராம கிருஷ்ணன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் நிருபன்சக்கரவர்த்தி, நிர்வாகி செல்வம் அளித்த மனுவில், மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் உள்ளது. மது விற்பதை நிறுத்தவும், மது அருந்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவும் வலி யுறுத்தினர். சமூகஆர்வலர் வலைச்சேரிபட்டி சரவணன் மனு: நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தோருக்கு பட்டா வழங்கிய அர சாணையை ரத்து செய்து பாதுகாப்பான இடங்களில் பட்டா வழங்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை பயன்படுத்தி, நீர் நில ஆக்கிரமிப்பு தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி, நீர்நிலைகளை காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.