மதுரை மாநகராட்சி கமிஷனரிடம் மனு
மதுரை; மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம், 67 வது வார்டு தி.மு.க., வட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு: விராட்டிபத்து கொக்குளப்பி அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். வாடகை கட்டடத்தில் செயல்படும் இம்மையத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை. பெற்றோர் வந்துசெல்வது சிரமமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இப்பகுதி சமுதாயக் கூடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. குழந்தைகள் நலன், பாதுகாப்பு கருதி சமுதாய கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.