உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருந்தியல் அலுவலர் வலியுறுத்தல்

மருந்தியல் அலுவலர் வலியுறுத்தல்

மதுரை : கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மவட்டத்தில் மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்தவாறு பணியாற்றினர்.தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் வேலுார் தீர்மானத்தில், பல்வேறு கோரிக்கைகளுக்காக மூன்று நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றினர். இதில், 700 க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனரின் பணிநேரத்தை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும், மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர் மருந்தியல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை