மேலும் செய்திகள்
துபாய் - மதுரை விமானம் 6 மணிநேரம் தாமதம்
04-Sep-2025
அவனியாபுரம்: சென்னையிலிருந்து மதுரை வந்த விமானம், அதிக வெப்பத்தால் பத்து நிமிடங்கள் வானில் வட்டமடித்து தரையிறங்கியது. இண்டிகோ விமானம் நேற்று மதியம் 12:40 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு 1:45 மணிக்கு மதுரைக்கு வந்தது. அந்த விமானத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். விமானம் தரையிறங்க ரன்வேக்கு வந்தபோது, அந்த பகுதியில் வெப்பம் அதிகமாக இருந்ததால், தரையிறங்காமல் மீண்டும் மேலே சென்றது. வானில் பத்து நிமிடங்கள் வட்டமடித்த விமானம் மதியம் 1:58 மணிக்கு தரை இயங்கியது. அதிக வெப்பத்தால் விமானம் மீண்டும் மேலே செல்வதாகவும், சிறிது நேரத்தில் இறக்கிவிடுவோம்' என விமானத்தில் பைலட் அறிவித்ததாக பயணி ஒருவர் வெளியே வந்து தெரிவித்தார். அந்த நேரத்தில் விமானநிலையப்பகுதியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
04-Sep-2025