மேலும் செய்திகள்
ஆராய்ச்சி நிலையத்தில் 100 மரக்கன்றுகள் நடல்
26-Sep-2026
மதுரை: மதுரை என்.எம்.ஆர்., மகளிர் கல்லுாரியில் விருட்சா பவுண்டேஷன் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், மரக்கன்று நடும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., கோபிசன் துவக்கி வைத்தார். இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன், டி.ஆர்.டி.ஏ., விஞ்ஞானி கண்ணன் முன்னிலை வகித்து கலாமின் பல்வேறு சாதனைகள் குறித்து பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். நடிகர் விஸ்வா, தொகுப்பாளர் சத்தியபிரயா, முதல்வர் கோமதி, செயலாளர் கலைவாணி, தாளாளர் ஜனரஞ்சனிபாய், துணைத் தலைவர் மகிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவிகள் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. தன்னார்வலர்கள் கவிதா, சபிதா, சந்திரா ஏற்பாடு செய்தனர். பவுண்டேஷன் நிறுவனர் ரஞ்சிதா தேவி நன்றி கூறினார்.
26-Sep-2026