உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பி.எம்.எப்.எம்.இ., திட்டம் நவ.27 முதல் இலவச பயிற்சி

 பி.எம்.எப்.எம்.இ., திட்டம் நவ.27 முதல் இலவச பயிற்சி

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தல் திட்ட (பி.எம்.எப்.எம்.இ.,) பயனாளிகளுக்கு நவ. 27 முதல் 29 வரை காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இலவச பயிற்சி நடக்கிறது. உணவுப் பதப்படுத்தும் துறையில் நிறுவனங்களை நவீனமயமாக்குவது மற்றும் மேம்படுத்துவதே இதன் நோக்கம் . உணவுத் துறையில் புதிதாக தொழில் தொடங்குவோர், குறு நிறுவன தொழில் முனைவோருக்கு ரூ. ஒரு கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இக்கடனுக்கு 35 சதவீத மானியம் வீதம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். அரிசி ஆலை, பருப்பு மில், மாவு மில்,எண்ணெய் ஆலை, மசாலா தயாரிப்பு, சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கு மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் வாங்க 35 சதவீத அரசு மூலதன மானியம் வீதம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம், மேலும் 3 சதவீத வங்கி வட்டி மானியம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டமும் சேர்த்து பெறுவதற்கு பதிவு செய்து தரப்படும். உணவுத் துறையில் தொழில் வளர்ச்சி, ஆன்லைன் சந்தைப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு, விற்பனை வாய்ப்புகள் குறித்து தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.) மூலம் இலவச பயிற்சி அளிக்கிறது. பி.எம்.எப்.எம்.இ., திட்டத்தின் பதிவெண், ஆதார் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் வரவேண்டும். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முதலில் வரும் 30 பேருக்கு மட்டும் அனுமதி. போக்குவரத்து ஊக்கத்தொகை, மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு: 97915 41990.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ