உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போக்சோ வழக்கு:தண்டனை

 போக்சோ வழக்கு:தண்டனை

மதுரை:மதுரை அருகே வேடர்புளியங்குளம் அர்ச்சுனன்35. இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரவேல் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அர்ச்சுனனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ