உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நம்பர் லாட்டரி விற்ற போலீஸ் ஏட்டு கைது ஏற்கனவே சஸ்பெண்ட் ஆனவர்

நம்பர் லாட்டரி விற்ற போலீஸ் ஏட்டு கைது ஏற்கனவே சஸ்பெண்ட் ஆனவர்

மதுரை:தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. ஆனாலும் துண்டுச் சீட்டில் லாட்டரி நம்பரை எழுதிக் கொடுப்பது, வாட்ஸாப்பில் அனுப்புவது என நுாதன முறையில் லாட்டரி விற்பனை நடக்கிறது. மதுரை பிபீகுளத்தைச் சேர்ந்த பாலாஜி, 52, என்பவரை பிடித்து, தல்லாகுளம் போலீசார் விசாரித்தபோது ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்றது தெரிந்தது.மதுரையைச் சேர்ந்த ரஹமத்துல்லா, கனி ஆகியோர் பாலாஜிக்கு வாட்ஸாப்பில் கேரளா லாட்டரி எண்களை அனுப்புவர். அதை தனது கூட்டாளிகள் மதுரை வீரன், பிரகாஷிற்கு அனுப்பி விற்று வருவதாக பாலாஜி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரையும், புதுார் கனி, 32, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பிரகாஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் படையில் போலீஸ் ஏட்டாக உள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே பிரச்னைக்காக பிரகாஷ் மாமூல் வசூலித்து வந்தார். மேலும், சூதாட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அவர் அப்போது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ