உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்....

போலீஸ் செய்திகள்....

நகை பறிக்க முயன்றவர் கைதுமதுரை: திருநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர். இவர் திருப்பரங்குன்றம் தேவி நகர் சந்திப்பு பாலாஜி நகரில் ரோந்து சென்றார். போலீசை கண்டதும் பதுங்கிய வாலிபர் ஒருவரை பிடித்தார். அவர் முதுகின் பின்புறம் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்து விசாரித்ததில், நகை, பணம் பறிக்கும் நோக்கத்தில் பதுங்கி இருந்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.வாளுடன் ரகளை, வாலிபர்கள் கைதுமதுரை: கூடல்புதுார் ரெயிலார் நகரில் பொதிகை மாரியம்மன் கோவில் உள்ளது. அதனருகே காலி இடத்தில் இரண்டு வாலிபர்கள் கையில் வாளுடன் ரகளை செய்தனர். அவர்களில் ஒருவர் ரகளை செய்ய, மற்றொருவர் அலைபேசியில் படமெடுத்தார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் எடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப்பகுதியினரை நடமாட விடாமல் மிரட்டிக் கொண்டும் இருந்தனர். பொதுமக்கள் கூடல் புதுார் போலீசுக்கு தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தார். வாள், அலைபேசியை பறிமுதல் செய்தனர். அவர்கள் ரயிலார் நகர் ராஜா, 21, திருவள்ளுவர் காலனி சிவா,29, எனத் தெரிந்தது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக 'ரீல்ஸ்' எடுத்ததாக தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலைமதுரை: தனக்கன்குளம் பைரவ நகர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ், 30. கார்பென்டரான இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் பிரச்னை செய்து வந்தார். மனைவி கண்டித்தும் கேட்கவில்லை. எனவே கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். மனமுடைந்த சுரேஷ், சமையலறையில் கம்பியில் துப்பட்டாவால் துாக்குப் போட்டு தற்கொலை செய்தார். மனைவி சத்யா திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.ரத்த சோகை: சிறுமி சாவுமதுரை: திருமங்கலம் மேலக்கோட்டை பெரிய வடகரையை சேர்ந்தவர் முத்து செல்வன் மகள் வனிஷா 10. இவர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தந்தை முத்து செல்வன் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமி வனிஷா இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.பல்கலை ஊழியர் பலிமதுரை: வடபழஞ்சி பல்கலை நகர் டிரைவர் குவாட்டர்ஸில் வசித்தவர் ஹரிசிவ் 41. இவர் மதுரை காமராஜ் பல்கலை அலுவலக உதவியாளர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. பெருமலை சந்திப்பருகே பாலத்தின் மீது குடிபோதையில் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமேற்பட்டதால், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது தாய் பார்வதி நாகமலை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் மோதி சாவுமதுரை: திருமங்கலம் மெயின் ரோட்டில் ஓட்டல் ஒன்றின் அருகே ஒருவர் சாலையை கடந்து சென்றார். அவ்வழியாக சென்ற தனியார் பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கப்பலுார் வி.ஏ.ஓ., பாண்டியராஜன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பஸ் ஓட்டுநர் சத்திய பாலா மீது வழக்கு பதிவு செய்தனர். இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.ஒருவர் பலிகொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் காளாப்பூர் மகேந்திரன் 35, மர வேலை செய்பவர், நேற்று மதியம் டூ வீலரில் அதே ஊரை சேர்ந்த பூமிநாதனுடன் 50, கண்மாய்பட்டி சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. கச்சிராயன்பட்டி நான்கு வழிச்சாலை அருகே சென்ற போது பின்னால் மதுரை - சென்னை சென்ற கார் மோதியதில் பூமிநாதன் இறந்தார். மகேந்திரன் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.நால்வர் கைது: வாகனங்கள் பறிமுதல் மேலுார்: கூத்தப்பன்பட்டி நவாக்குடி கண்மாய் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியது தெரியவரவே நாவினிபட்டி வி.ஏ.ஓ., மணிகண்டன் அவருடைய ஊழியர்களுடன் சேர்ந்து நால்வரை பிடித்து மேலுார் போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் எஸ்.ஐ., ஜெயக்குமார் ஏ.கோவில்பட்டி சுமன் 31. கம்பர்மலைபட்டி பிரேம்குமார் 21, புதுசுக்காம்பட்டி பழனிகருப்பன் 27, பெரியகருப்பு தேவர் 32, உள்ளிட்ட நால்வரை கைது செய்து, டிப்பர் லாரி, கார், டூ வீலரை பறிமுதல் செய்தனர்.--மின்சாரம் தாக்கி ஒருவர் பலிதிருமங்கலம்: திரளியைச் சேர்ந்த வேன் டிரைவர் விஜயகுமார் 32, திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் கப்பலுார் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதம் முன்பு பணியாற்றி நின்றுவிட்டார். தற்போது வேன் ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களோடு முன்பு வேலை பார்த்த நிறுவனத்தின் அருகே டூவீலரில் சென்றார். அந்த பகுதியில் மின்சாரம் தாக்கியதால் இறந்தார். உடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் மோதி மூதாட்டி பலிசோழவந்தான்: வைத்தியநாதபுரம் சுப்புகாளை மனைவி சரஸ்வதி 75, நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே பீடர் ரோட்டில் நடந்து சென்றார். நிலக்கோட்டை தாலுகா மீனாட்சிபுரம் மணிவேல் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் சரஸ்வதி காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மணிவேலை போலீசார் தேடி வருகின்றனர்.மது பாட்டில்கள் பறிமுதல்சோழவந்தான்: காடுபட்டி எஸ்.ஐ.,சிவகுமார் மற்றும் போலீசார் அய்யப்பன்நாயக்கன்பட்டி பெருமாள் கோயில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சாக்கு மூடையில் மது பாட்டில்களுடன் நின்றிருந்த குருவித்துறை கரிகாலனை 42, கைது செய்தனர். அவரிடமிருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை