போலீஸ் செய்திகள்
காஸ் கசிவால் பெண் பலிமதுரை: முடக்குசாலை இந்திராணி நகர் மகேந்திரன். டாஸ்மாக் சூப்பர்வைசர். இவரது மனைவி சர்மிளா 33. அதிகாலை காஸ் சிலிண்டர் தீர்ந்ததால் மற்றொரு சிலிண்டரை மாற்றினார். அப்போது ஏற்கனவே இருந்த சிலிண்டரில் இருந்து காஸ் 'லீக்' ஆகி சமையல் அறையில் பரவி இருந்தது. அதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தபோது மின் சுவிட்ச் போர்டில் தீப்பிடித்தது. அதிர்ச்சியில் சர்மிளா மயங்கி விழுந்தார். சமையல் அறை மேல் இருந்த அட்டை, தெர்மகோல் தீப்பிடித்து, சர்மிளா மீது விழுந்ததில் அவர் தீக்காயமுற்றார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவர் பலிமேலுார்: கம்பர்மலைபட்டி சேவுகரத்தினம் மகன் தனுஷ் 13. அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். குளத்தில் குளித்த போது மூழ்கி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.