போலீஸ் செய்திகள் ...
மகனை கொலை செய்த தந்தை
மதுரை: செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு நந்தவனத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் 61. இவரது மகன் லட்சுமணன் 28. லோடுமேன். மதுகுடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு பொறுமை இழந்த வாசுதேவன், ஆட்டு உரல் கல்லை துாக்கி தலையில் போட்டு கொலை செய்தார். பின்னர் செல்லுார் போலீசாரிடம் சரண் அடைந்தார். மனஅழுத்தத்தில் தற்கொலை
மதுரை: எஸ்.எஸ்.காலனி கம்பர் தெரு பசுபதி 38. ஐ.டி., நிறுவன முன்னாள் ஊழியரான இவர், சொந்தமாக டீ கடை வைக்க முடிவு செய்து வெளிநாட்டில் இருந்து டீ பவுடர் வாங்கினார். டீ தயாரிப்பது குறித்து பயிற்சி பெற அடுத்த மாதம் கோல்கட்டா செல்ல ரூ.35 ஆயிரம் செலுத்தினார். இந்நிலையில் கடை வைக்க ரூ.5 லட்சம் தேவைப்பட்டதால் மனஅழுத்தத்தில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, 4 வயது மகன் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர். புகையிலை பொருட்கள் பறிமுதல்
சோழவந்தான்: காடுபட்டி எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையில் போலீசார் பெரியமாயன், அலெக்ஸ் பாண்டியன் குருவித்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டூவீலர்களில் சாக்கு மூடைகளுடன் வந்த மூவரை சோதனை செய்தனர். அதில் 87 பாக்கெட்டுகளில் ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதுதொடர்பாக வத்தலகுண்டு இஸ்மாயில் 57, உத்தப்பநாயக்கனுார் குணசேகரன் 38, விற்பனைக்காக வாங்கிய குருவித்துறை சந்தோஷ் 32, ஆகியோரை கைது செய்தனர். மாணவி தற்கொலை
திருமங்கலம்: மைக்குடி மின்வாரிய ஊழியர் ராமர். இவரது மகள் முத்துப்பிரியா 18. கப்பலுார் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவி. நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். விபச்சாரம்: 2 பேர் கைது
மதுரை: தபால்தந்திநகர் பகுதியில் சேலம் ஆத்துார் அபினாஷ் வாடகை கட்டடத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இங்கு போலீசார் சோதனையிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லுாரி மாணவி, மேலாளர் சுதர்சன், புரோக்கர் கார்த்திக்கை கைது செய்தனர்.