மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
12-Nov-2024
தந்தை, மகன் மீது வழக்கு மதுரை: கருவனுாரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மேலமடை சிக்னல் அருகே நண்பர் சண்முகநாதனுடன் வந்தபோது முன்விரோதம் காரணமாக வீரபாண்டி ஊரைச் சேர்ந்த மணிகண்டன், மகன் ஆதித்யா ஆகியோர் கம்பியால் தாக்கினர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.புகையிலை விற்றவர் கைதுமேலுார்: உணவு பாதுகாப்பு அதிகாரி பால்சாமி 46, பூசாரிபட்டி பகுதியில் சென்ற போது ஒருவர் புகையிலை விற்றதை அறிந்தார். எஸ்.ஐ., ஆனந்தஜோதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் புகையிலை விற்ற பிச்சைராஜனை 65, கைது செய்து 65 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தார்.கொட்டாம்பட்டி: எஸ். ஐ., முகமது சல்மான் பள்ளபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது புகையிலை விற்ற காஜாமுகமதுவை 44, கைது செய்து 28 கிலோ புகையிலை பறிமுதல் செய்தார்.மாணவர் பலிமேலுார்: பொன்னமராவதி ராஜேஷ்குமார் 25, சேலம் சட்ட கல்லுாரியின் இறுதி ஆண்டு மாணவர். நேற்று மதியம் டூ வீலரில் மதுரைக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. மேலுார் கூத்தப்பன்பட்டி அருகே பின்னால் சென்ற லாரி, டூ வீலர் மீது மோதியதில் ராஜேஷ்குமார் இறந்தார். எஸ்.ஐ.,பாலமுருகன் விசாரிக்கிறார்.
12-Nov-2024