உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

சில்மிஷம் செய்தவருக்கு குண்டாஸ்வாடிப்பட்டி: பாலமேட்டை அடுத்த கோடாங்கிபட்டி வெள்ளைச்சாமி 44, கூலித் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்த புகாரில் சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தலைமையில் போலீசார் வெள்ளைச்சாமியை கைது செய்தனர். எஸ்.பி.,அர்விந்த் பரிந்துரையில் இவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார்.கஞ்சா கடத்திய நால்வர் கைதுதிருமங்கலம்: சோழவந்தான் ரோட்டில் உரப்பனுார் கண்மாய் அருகே திருமங்கலம் நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, 1.100 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவர்கள் வந்த கார், அலைபேசி, கஞ்சாவை பறிமுதல் செய்து, மேல உரப்பனுார் மூவேந்திரன் 25, கரடிக்கல் ராமகிருஷ்ணன் 25, ஆகியோரை கைது செய்தனர்.* கீழக்கோட்டை பகுதியில் நடந்த சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1. 800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விற்பதற்காக கஞ்சா வைத்திருந்த நெல்லை மாவட்டம் மேலகருங்குளம் சங்கர் 25, கீழக்கோட்டை பாஸ்கர் 28, ஆகியோரை கைது செய்தனர்.கஞ்சா பறிமுதல்: இருவர் கைதுபாலமேடு: வலையபட்டி பகுதியில் எஸ்.ஐ., அண்ணாதுரை மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது டூவீலரில் கஞ்சாவுடன் வந்த சத்திரவெள்ளாளபட்டி பிரசாந்த் 29, மறவபட்டி கவுதமை 19,கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி