உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ஆட்டோ டிரைவர் கொலை

மதுரை: உலகநேரி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ் 27. ஆட்டோ டிரைவர். நேற்று முன் தினம் இரவு கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் வீட்டருகே வசிக்கும் நண்பரான லோடுமேன் தமிழரசன் 29, கொலை செய்தது தெரிந்தது. வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் இரவு இருவரும் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாறி மாறி கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் அபினேஷ் இறந்தார். இதை அறியாமல் போதையில் வீட்டிற்கு சென்று தமிழரசன் துாங்கினார். நேற்று காலை போலீஸ் வந்தபிறகுதான் கொலை செய்தது தெரிந்தது. கடந்தாண்டு அபினேஷ் உள்ளிட்ட நண்பர்கள் தமிழரசனை தாக்கியதில் அவர் 6 மாதம் கோமாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கள் விற்றவர் கைது

பேரையூர்: அணைக்கரைப்பட்டி மலைராஜா 40. இவர் அதே ஊரில் கள் விற்றார். ரோந்து சென்ற சாப்டூர் எஸ்.ஐ., சரவணகுமார் கைது செய்து 8 லிட்டர் கள் பறிமுதல் செய்தார்.

கொலையில் 4 பேர் கைது

வாடிப்பட்டி: மதுரை ஜெய்ஹிந்த்புரம் சரவணபாண்டி 23. வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா இந்திரா காலனியில் நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் காலை அப்பகுதி நண்பர் மோகன்ராஜூடன் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த அதேபகுதி வினோத்குமார் உள்ளிட்டோர் முன்விரோதம் காரணமாக மோகன்ராஜ், சரவணபாண்டியை தாக்கினர். இதில் சரவண பாண்டி இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் மோகன்ராஜ் சிகிச்சை பெறுகிறார். இவ்வழக்கில் வினோத்குமார் 32, மதுபாலாஜி 26, பாலமுருகன் 23, மணிகண்டன் 24, ஆகியோரை வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ