உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: வில்லாபுரம் கர்ணன் 28. கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

தேர்வில் தோல்வி: இளைஞர் தற்கொலை

மதுரை: அண்ணாநகர் கிருஷ்ணகுமார் மகன் அசோக்குமார் 25. துபாயில் 'உலக வர்த்தகம்' குறித்த படிப்பு படித்தார். அத்தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். மனஅழுத்தத்தில் தனிமையில் இருந்தவர், சங்கலியால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ