மேலும் செய்திகள்
சூறைக்காற்று சாய்ந்த மரங்கள்
07-May-2025
ஓய்வு அலுவலர் வீட்டில் திருட்டுபாலமேடு: அலங்காநல்லுார் அருகே முடுவார்பட்டி பழனி 69, ஓய்வு பெற்ற கலெக்டர் அலுவலக உதவியாளர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்றுவிட்டு மாலையில் திரும்பினார். இவர் வீட்டின் முன்பகுதியில் வைத்து சென்ற சாவியை எடுத்து திறந்த நபர் நிலத்தை விற்று வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பீரோவை உடைத்து திருடி சென்றுள்ளார். பாலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.முன்னாள் ராணுவ வீரர் பலிவாடிப்பட்டி: போடிநாயக்கன்பட்டி முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி 56, தற்போது பெரியகுளம் எஸ்.பி.ஐ.,வங்கியில் காசாளர். நேற்று மாலை திண்டுக்கல் விருவீட்டில் உள்ள தோட்டத்திற்கு டூவீலரில் சென்று திரும்பினார். வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே குறுக்கே வந்த டூவீலர் மோதியதில் கிருஷ்ணமூர்த்தி இறந்தார். மற்றொரு டூவீலரில் வந்த ராதாகிருஷ்ணன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கத்தியைக்காட்டி வழிப்பறிமதுரை: பாஸ்கரதாஸ் நகர் மீனாட்சி சுந்தரம் 30. ரயில்வே ஸ்டேஷன் பார்சல் ஆபீசில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு பணி முடிந்து மதுரா கோட்ஸ் பாலம் நோக்கி தண்டவாளத்தில் நடந்து சென்றார். அவ்வழியே வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து தப்பினார். ரயில்வே போலீசார் நாமக்கல் மாவட்டம் ஆவத்திப்பாளையம் தனசேகரன் 25, என்பவரை கைது செய்து வழிப்பறி செய்த ரூ.300 ஐ மீட்டனர்.சிறுவன் பலிவாடிப்பட்டி: தாதம்பட்டி கூலித் தொழிலாளி கார்த்திக் மகன் ரித்திஷ் 8, போடிநாயக்கன்பட்டி பகுதி அரசு உதவிபெறும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். நேற்று மாலை தனது தம்பி க்ரிஷ் 6, நண்பர்களுடன் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்னால் உள்ள விவசாய கிணற்றில் குளித்த போது தவறி விழுந்து இறந்தார். வாடிப்பட்டி போலீசார் சிறுவன் உடலை மீட்டனர்.
07-May-2025