உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

மாணவர் பலிசிலைமான்: பாப்பன்ஓடை பகுதியை சேர்ந்தவர் அரசகுமரன் மகன் விக்னேஷ்வரன் 14. அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே கிணற்றில் சகோதரன் மற்றும் நண்பர்களுடன் குளித்தபோது மூழ்கி இறந்தார். 3 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை போலீசார் மீட்டனர். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.கைதி இறப்புமதுரை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 56. பணமோசடி வழக்கில் தண்டனை கைதியாக மதுரை சிறையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.வாகனங்கள் பறிமுதல்மேலுார்: நேற்று முன்தினம் இரவு சாலைக்கிபட்டி ரோட்டில் ரோந்து சென்ற போது ஓடையில் மணல் அள்ளியவர்கள் கீழவளவு போலீசாரை கண்டதும் தப்பினர். போலீசார் டிராக்டர், மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.டீக்கடையில் வெடித்த சிலிண்டர்சோழவந்தான்: கருப்பட்டி மாயாண்டி கோயில் தெரு ரவிச்சந்திரனின் டீக்கடையில் காஸ் கசிவால் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. கடை முற்றிலும் சேதமடைந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.ரயிலில் 17 பவுன் திருட்டுதிருமங்கலம்: காமாட்சிபுரம் ஜெயராமன் மனைவி தமிழ்ச்செல்வி 27. சென்னையில் வசிக்கின்றனர். ஜூன் 27ல் திருமங்கலத்தில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக தமிழ்ச்செல்வி வந்தார். ஜூலை 2ல் திருமங்கலத்தில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸில் சென்னைக்கு சென்றார். அப்போது 12 பவுன் செயின் உள்ளிட்ட 17 பவுன் நகைகளை பர்ஸில் வைத்திருந்தார். சென்னைக்கு சென்று பார்த்தபோது நகையை காணவில்லை. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.பழிக்குப்பழி கொலை: 5 பேர் கைதுவாடிப்பட்டி: கோவில்பாப்பாகுடி கொத்தனார் வினோத்குமார் 29. இரு ஆண்டுகளாக சமயநல்லுார் வைகை நகர் ரோடு பகுதியில் மனைவி அமுதா 23, மூன்று வயது மகளுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதி பழைய சினிமா தியேட்டர் அருகே காரில் வந்த ஒரு கும்பல் தலையை சிதைத்து கொலை செய்து தப்பியது. சிக்கந்தர் சாவடியில் 2022ல் நடந்த பெத்தானியாபுரம் பகுதி ஆட்டோ டிரைவர் ரவி கொலையில் வினோத்குமார், நண்பர் சூர்யா கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு சூர்யா பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் வினோத்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மதுரை டி.ஆர்.ஓ., காலனி சேதுபதி 28, திருமங்கலம் ஸ்ரீதர் 23,பெத்தானியாபுரம் சிவா 29, மேட்டு தெரு தமிழரசு 20, கருப்பாயூரணி சிரஞ்சீவி 24, ஆகியோரை போலீசார் கைது செய்து கார், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை