உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கொலை வழக்கில் கைதுமதுரை: மேல கள்ளந்திரியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. 5 மாதங்களுக்கு முன் ஆட்டோ வாங்க கோகுல்ராஜ் உட்பட சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்தார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் 10 நாட்களுக்கு முன் இவரை கொலை செய்ய முயற்சித்தனர். இருநாட்களுக்கு முன் அழகர்கோவில் ரோட்டில் இவரை வெட்டிக்கொலை செய்ததாக தொப்பலாம்பட்டி கோகுல்ராஜ் 21, டி.மேட்டுப்பட்டி நித்தீஸ்வரன் 20, கோணப்பட்டி ஆகாஷ் 20, கம்மாபட்டி வெற்றிவேல் 23, ஆகியோரை அப்பன்திருப்பதி போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து கோயில்களில் திருட்டுவாடிப்பட்டி: நீரேத்தான்- மேட்டுநீரேத்தான் ரோட்டில் வயல்வெளி சாலையில் அடுத்தடுத்து 4 கோயில்களில் திருட்டு நடந்தது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இப்பகுதி கோயில்களில் சுவாமி, அம்மனுக்கு தங்க நகைகளை அணிவித்து பூஜைகள் நடந்தது. நேற்து முன்தினம் இரவு கோயில் கதவு, உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் திருடி உள்ளனர். அகிலாண்டேஸ்வரி ஓந்தாய் அம்மன் கோயில் அம்மன் சிலைகளில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள்,அங்காள பரமேஸ்வரி, வாலகுருநாத சுவாமி கோயிலில் பூட்டை உடைத்து 2 பவுன் செயின், இரண்டரை கிலோ வெள்ளி கலசங்கள், உண்டியலில் இருந்த ரூ.57 ஆயிரம் திருடு போனது. அய்யனார் கோயிலில் திருட முயற்சித்துள்ளனர். அங்காள பரமேஸ்வரி கோயிலில் ரூ. 5 ஆயிரத்தை திருடி உண்டியலை வயலில் வீசி சென்றுள்ளனர். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ஆய்வாளர் மீது வழக்குமதுரை: மாட்டுத்தவாணி காய்கறி மார்க்கெட் துாய்மை பணியாளர் அழகர். இவர் ஜூலை 30ல் பணியில் இருந்த போது மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகையா ஆய்வுக்கு சென்றார். அப்போது அழகர், பெண் துாய்மை பணியாளர்களை ஜாதியை சொல்லி திட்டியுள்ளார். மேலும் பணிக்கு வந்திருந்தும் வருகை பதிவில் 'வரவில்லை' என குறிப்பிட உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் அழகர் அளித்த புகாரில் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ