உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

டிரைவர் பலி - மதுரை: சிவகாசி அருகே காரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் குழந்தை ராஜ் 28. திருமணமாகி சில மாதங்களே ஆகிறது.சிவகாசி-சென்னைசரக்கு வாகனத்தை ஓட்டிசென்றபோது,வண்டியூர் டோல்கேட் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் வாகனத்தில் மோதி உடல் நசுங்கி டிரைவர்குழந்தைராஜ் சம்பவ இடத்திலயே இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர். கணவனுடன் தகராறு மனைவி தற்கொலை வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி புனித ஆரோக்கிய மேரியின் 2வது மகள் மெலினா 19, இவருக்கு மதுரை அய்யங்கோட்டை செந்தில் வேலனுடன் 25, இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சமயநல்லுாரில் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. கொத்தனார் வேலை பார்க்கும் செந்தில் வேலன் மது குடித்துவிட்டு, அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். ஆக.30 இரவு வீட்டுக்கு தாமதமாக வந்த செந்தில் வேலன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். விரக்தியடைந்த மெலினா வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சமயநல்லுார் போலீசார் ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு பரிந்துரைத்தனர். சிறுவன் தற்கொலை மதுரை: பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் சபரீசன் 15. தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலையில் இருந்து சிறுவன் மாயமானதால் தேடிவந்தனர். நேற்று காலை வீட்டின் மாடி அறையில் சிறுவன் துாக்கிட்டு இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுப்ரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி