உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தவறி விழுந்த சிறுவன் பலி திருமங்கலம்: உச்சபட்டியை சேர்ந்த ரவிக்குமார் மகன் ரிஷிதரன் 7, அரசுப் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்தார். தீபாவளியையொட்டி நேற்று நண்பர்களோடு உச்சபட்டி மருதகாளி கோவில் அருகே வெடி வெடித்துள்ளார். வெடியில் தீ வைத்து விட்டு ஓடி வரும்போது அந்தப் பகுதியில் திறந்து கிடந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். தொட்டிக்குள் கிடந்த கண்ணாடி பாட்டில்கள் அவர் மீது குத்தியதில் காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இருவர் கைது கொட்டாம்பட்டி: பாண்டாங்குடி ராஜ்குமார் 29, பள்ளபட்டி விக்னேஷ்வரன் 30, இருவருக்கிடையே ஆறு மாதங்களுக்கு முன் டூவீலர் மோதியது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று விக்னேஸ்வரன் ஆயுதங்களுடன் பாண்டாங்குடிக்கு நண்பர்களுடன் சென்று தகராறு செய்தார். கொட்டாம்பட்டி போலீசார் பள்ளபட்டி புதுார் ஆகாஷ் 29, குமுட்ராம்பட்டி பிரகாஷ் 28, உள்பட இருவரை கைது செய்தனர். மின்சாரம் பாய்ந்து மாடு பலி சோழவந்தான்: கல் புளிச்சான்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோட்டை 30, மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை மழை காரணமாக வழக்கத்திற்கு முன்னதாக மாலையில் வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பள்ளத்து தெருவில் இருந்த மின் கம்பத்தில் 'எர்த்' கம்பி சுற்றப்பட்டிருந்தது. தெரு குறுகலாக இருந்ததால் மாடு மின் கம்பத்தை உரசிச் செல்ல வேண்டியிருந்தது. 'எர்த்' கம்பியில் மின் கசிவு காரணமாக பசுமாடு அந்த இடத்திலேயே பலியானது. மற்ற மாடுகளும் கோட்டையும் உயிர் தப்பினர். அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விதிமீறி பட்டாசு: 35 பேர் மீது வழக்கு மதுரை: தீபாவளியன்று காலை 6:00 முதல் 7:00, இரவு 7:00 முதல் 8:00 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசு வெடிக்க மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் நகரில் பல இடங்களில் விதிமீறியும், பாதுகாப்பற்ற முறையிலும் பட்டாசு வெடிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் ஐராவதநல்லுார் மந்தையம்மன் கோயில் அருகே விதிமீறி வெடித்த ஊர்காவலன் 21, நாகலிங்கம் 22, மீது தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நரிமேடு பகுதியில் அஸ்வின் 21, மீது தல்லாகுளம், மண்மலைமேடு மெயின்ரோட்டில் பட்டாசு வெடித்த ஆறுமுகம் 55, மீது புதுார், சேவாலயம் மாணவர் விடுதி அருகே ராஜபாண்டி 23, மீது மதிச்சியம் போலீசார் என நகரில் 20 பேர் மீது வழக்குகள் பதிவு செய்தனர். மாவட்ட பகுதியிலும் பேரையூர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை