உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே சின்ன உலகாணி பால்பாண்டி 40. ரியல் எஸ்டேட் தொழில் நடத்துகிறார். தன்னிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு செய்து தருவதாக உறவினர்கள், பொதுமக்களிடம் சில ஆண்டுகளுக்கு முன் பணம் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் வட்டியுடன் சேர்த்து பணம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். நாளடைவில் யாருக்கும் பணம் திருப்பித் தரவில்லை.ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கூடக்கோவில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பால்பாண்டி மனைவி பூமாரி 33. உக்கிரபாண்டி 37. காளிமுத்து 70. ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ