உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ்காரருக்கு ஜாமின்

போலீஸ்காரருக்கு ஜாமின்

மதுரை: மதுரை காதக்கிணறு பூபாலன் 35. அப்பன் திருப்பதி போலீஸ் ஏட்டு. வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக மனைவி தங்கபிரியா புகார் அளித்தார். பூபாலன், தந்தை சாத்துார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாய் விஜயா, தங்கை மீது அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிந்தனர். பூபாலன் ஜூலை 19ல் கைது செய்யப்பட்டார். செந்தில்குமார், விஜயா முன்ஜாமின் பெற்றனர். மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பூபாலன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மோகன்குமார் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 35 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். ஜாமின் அனுமதிக்கப் படுகிறது. அப்பன்திருப்பதி போலீசில் 30 நாட்கள் ஆஜராக வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !