உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோட்டில் குவியும் பாலிதீன் குப்பை

ரோட்டில் குவியும் பாலிதீன் குப்பை

வாடிப்பட்டி, : துவரிமானில் ரோட்டின் ஓரத்தில் குவியும் பாலிதீன் குப்பையால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. சோழவந்தான், மேலக்கால் பகுதிகளில் இருந்து துவரிமான் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மதுரைக்கு சென்று வருகின்றன. இந்த ரோட்டோரம் கோயில்கள், துவக்கப்பள்ளி, கிராம சிறுவர் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் உள்ளது. இவற்றின் அருகே கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ரோட்டின் நடுப்பகுதி வெள்ளைக்கோடு வரை கொட்டப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் காற்றடிக்கும்போது ரோட்டில் பறப்பதால், போக்குவரத்து இடையூறு உள்ளது. டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இங்கு குப்பை கொட்டாமல் தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை