பூஜை போட்டாச்சு: பாலம் என்னாச்சு
திருமங்கலம் : விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டையில் நான்குவழிச்சாலையில் ரூ. 97.75 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க கடந்த ஏப்ரலில் பூமி பூஜை நடந்தது. தற்போது வரை பாலம் அமைப்பதற்கான எந்த பணியும் நடக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், எம்.பி., மாணிக்க தாகூர் பாலம் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.