தபால் குறைதீர்க்கும் முகாம்
மதுரை; மதுரை தெற்கு மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் டிச.19 ல் , காலை 11:30 மணிக்கு பீபிகுளத்தில் நடக்க உள்ளது.தபால் குறைதீர்க்கும் முகாமில் ஏற்கனவே மனுகொடுத்து கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதோர் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். தனியார் கூரியரில் அனுப்பக் கூடாது. உறையின் முன்பக்க மேல் பகுதியில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம், டிசம்பர் என குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பிய தேதி, நேரம், அனுப்பியவர், பெறுபவர் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் விவரத்தை குறிப்பிட வேண்டும். தபால்துறை சம்பந்தமான கடிதத் தொடர்பு இருப்பின் புகாருடன் இணைக்க வேண்டும். கடைசி நாள்: 10.12.24