உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோழி வளர்ப்பு பயிற்சி

கோழி வளர்ப்பு பயிற்சி

மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசுகையில் ‘‘அனைத்து காலங்களிலும் நாட்டுக்கோழி வளர்ப்பு வருமானம் கொடுக்கும். பகுதிநேரமாக செய்தாலும் மாதம் ரூ. 6000 முதல் ரூ.8000 வரை பெறலாம்’’ என்றார். கோழி வளர்ப்பின் முக்கியத்துவம், உற்பத்தி, ரகங்கள், தீவனம், நோய் மேலாண்மை குறித்து கால்நடை டாக்டர் சரவணன் விளக்கினார். நோய்த்தடுப்பு, வங்கிக்கடன் குறித்து திண்டுக்கல் கால்நடை பயிற்சி மையத் தலைவர் முருகன் பேசினார். உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி