மேலும் செய்திகள்
விபத்தில் போலீஸ் பலி
17-Nov-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொகுதி க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த மாநில நீச்சல் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடந்த 400*100 பிரீஸ்டைல், மிட்லே ஆகிய ரிலே போட்டிகளில் யுவஸ்ரீ, சாதனா, நிரோஷா, யாழினி, எம்.யாழினி ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். மாநில போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. உதவித் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஜெயக்கொடி, நிஜாமுதீன் முன்னிலை வகித்தனர். உசிலம்பட்டி எம்.எல்.ஏ., விஜய்மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கினார். கடந்தாண்டு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கு ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
17-Nov-2026