உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாம்பிரசாத் தலைமை வகித்தார். செயலாளர் சரவணமுருகன் வரவேற்றார். முன்னாள் சட்ட செயலாளர் கணபதி, தென் மண்டல செயலாளர் சின்னதுரை முன்னிலை வகித்தனர். மாநில பிரசார செயலாளர் கந்தசாமி, தலைமையாசிரியர்கள் சங்கரலிங்கம், சின்னப்பாண்டி, கணபதி சுப்பிரமணியன், மோகன், முருகேசன், சிவக்குமார், சாந்தி உள்ளிட்டோர் 'அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அடிப்படை அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தலைமையாசிரியர்கள் விஜயகுமார், வினோத், உமர்பரூக், ராஜேந்திரபிரசாத், தண்ணாயிரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பரமசிவம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி