உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைதி தப்பி ஓட்டம்

கைதி தப்பி ஓட்டம்

மதுரை : வாடிப்பட்டி நீரேத்தானைச் சேர்ந்தவர் கோபி 21. அடிதடி வழக்கில் வாடிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவு 10:00 மணி அளவில் சிறுநீர் கழிக்க வேண்டும் என பாதுகாப்புக்கு இருந்த போலீசாரிடம் கூறிவிட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு தப்பினார். போலீசார் தேடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து விசாரணை கைதி ஒருவர் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை