உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் சிந்தனைப் பேரவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் -கலைஞர்கள் சங்கம் சார்பில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.வக்கீல் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் அறிவழகன், டாக்டர் சந்திரன், ஓய்வு தலைமை ஆசிரியர்சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆசிரியர் வைரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !