மேலும் செய்திகள்
மதுரையில் பாரதியார் நினைவு தினம்
12-Sep-2025
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி கே.பி. அனைத்து விளையாட்டுக் குழு சார்பில் காந்தி ஜெ யந்தி விழாவில் பல்வகை விளையாட்டு போட்டிகள், பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தன. எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றத் தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். விளையாட்டுக் குழு செயலாளர் பாஸ்கர்பாண்டி வரவேற்றார். போட்டிகளில் வென்றோருக்கு கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, விஜயா, சமூக ஆர்வலர் நாகராஜன் பரிசு வழங்கினர். ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, வசந்தி, சுந்தரிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கீதா விருது வழங்கினார். ஹார்வி மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், ஏணி அமைப்பின் மகுடபதி, பார்த்திபன், மதுரை கல்லுாரி பேராசிரியர் அரவிந்த் பிரகாஷ் பேசினர். சிறந்த சேவையாற்றியோருக்கு காமராஜ், வ.உ.சி., முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருதுகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், விளையாட்டு குழு நிர்வாகிகள் முத்துராஜ், ரவிச்சந்திரன், அரவிந்தன், ரஞ்சித்குமார் ஏற்பாடு செய்தனர்.
12-Sep-2025