திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் குறைவில்லா பிரச்னைகள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலத்தில் வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். திருமங்கலம், திருநகரிலிருந்து மதுரைக்கு செல்லும் டவுன் பஸ்கள், திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் ஒரு வாகனங்கள் அந்த மேம்பாலத்தில் சென்று திரும்புகின்றன. உட்புற சுவர்கள், வெளிப்புற சுவர்களிலும் பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. அதில் சில மரங்களாக மாறி வருகின்றன. பாலத்தின் ரோட்டின் இருபுறமும் மணல் குவிந்துள்ளது. பல்வேறு இடங்களில் ரோட்டில் பள்ளங்கள் அதிக அளவில் உள்ளதால் டூவீலரில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இரவில் டூவீலரில் செல்வோர் பள்ளங்களில் விழுந்து காயம் அடைகின்றனர். சீரமைக்க நடவடிக்கை தேவை.